காங்கிரஸ் கட்சியின் கொள்கையை கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது - ப.சிதம்பரம்


x

சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"அனைத்து தோழமைக் கட்சியினருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இங்கு குழுமியுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் இந்நாள் தலைவர்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இவ்வாறு அனைவரும் சேர்ந்து இந்த வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நான் தெரியபடுத்தியுள்ளேன். அவரும் தன்னுடைய மகிழ்ச்சியை பாராட்டை தெரிவித்துள்ளார். வரும் 3-ம் தேதிக்குப் பிறகுதான் தேர்தல் உண்டா இல்லையா என்பது தெரியவரும், அதன்பின்னர் நான் செய்தியாளர்களிடம் விரிவாக பேசுகிறேன்' என்றார்.

சிபிஐ சோதனை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை பற்றி எல்லாம் நான் புதிதாக கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2 நாட்களுக்கு முன்னால் ஷாருக்கானின் மகன் வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்று உங்களுக்குத் தெரியும் என்றார்.


Next Story