கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் வாங்க ரூ.1,614 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்


கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் வாங்க ரூ.1,614 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்
x

மொத்தம் ரூ.1,614.89 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடலோர காவல்படைக்கு 6 ரோந்து கப்பல்கள் வாங்குவதற்காக மசாகான் டாக்யார்டு ஷிப்பில்டர்ஸ் (Mazagon Dockyard Shipbuilders) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மொத்தம் ரூ.1,614.89 கோடிக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு, கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story