முதல்-மந்திரி பதவிக்கான சண்டை காங்கிரசில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்: பா.ஜ.க. மந்திரி பேட்டி


முதல்-மந்திரி பதவிக்கான சண்டை காங்கிரசில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்:  பா.ஜ.க. மந்திரி பேட்டி
x

முதல்-மந்திரி பதவிக்கான சண்டை காங்கிரசில் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என பா.ஜ.க. முன்னாள் மந்திரி அரக ஞானேந்திரா இன்று பேட்டியில் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. எனினும், முதல்-மந்திரி பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். இந்த நிலையில், இருவரும் தனித்தனியே ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். எனினும், முதல்-மந்திரி யாரென்று அறிவிப்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் முன்னாள் மாநில உள்துறை மந்திரியான அரக ஞானேந்திரா இன்று கூறும்போது, காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி. அக்கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கான சண்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.

கட்சியில் உள்ள அனைத்து சாதி பிரிவினரும் முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதுவே காங்கிரஸ் கட்சியின் கலாசாரம் என்று கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பதவிக்கான சண்டை தொடர்ந்து நடைபெறும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு அவர்கள் எதுவும் செய்ய போவதில்லை. டெல்லிக்கு சென்ற பின்னரும் கூட அவர்களது சண்டை தொடரும் என்று கூறியுள்ளார்.


Next Story