சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது வலிமையான நடவடிக்கை - ராகுல்காந்தி
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்தவுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு. மிகவும் முற்போக்குத்தனமானது.
ஏழைகள் விடுதலைக்கு இது வலிமையான நடவடிக்கை. பெரும்பாலான 'இந்தியா' கூட்டணி கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் என்று கருதுகிறேன். எந்த கட்சிக்காவது மாறுபட்ட கருத்து இருந்தால், காங்கிரஸ் வளைந்து கொடுக்கும். நாங்கள் பாசிஸ்டு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story