காங்கிரசின் 'உத்தரவாதம்' பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும்: சோனியா காந்தி
பெண்களின் கடின உழைப்புக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் வந்துள்ளதாக சோனியா காந்தி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
96 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
"சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியாவை உருவாக்குவது வரை பெண்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், இன்று கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். பெண்களின் கடின உழைப்புக்கும், தவத்துக்கும் நீதி கிடைக்க காங்கிரஸ் வந்துள்ளது. காங்கிரசின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறது
காங்கிரசின் "உத்தரவாதங்கள்" ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. காங்கிரசின் 'உத்தரவாதம்' பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும். இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உங்கள் குடும்பச் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள்."
இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.