முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது; பிரதமர் மோடி பேச்சு


முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது; பிரதமர் மோடி பேச்சு
x

ஏழைகளை தவறாக வழிநடத்துவது மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விசயங்களை தடுப்பது என்ற கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அஜ்மீர்,

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர், 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இதன்படி, பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று மொத்தம் 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி ராஜஸ்தானில் அஜ்மீர் நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசினார்.

அப்போது அவர், ஏழைகளை தவறாக வழிநடத்துவது மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விசயங்களை தடுப்பது என்ற கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வந்தது.

ஆனால், பா.ஜ.க. தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியானது, நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னை அர்ப்பணித்தும் மற்றும் நல்ல நிர்வாகமும் அளித்து உள்ளது என பேசியுள்ளார்.

நாட்டின் நாயகர்களான, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி மோசடி செய்து விட்டது. ஒரே தரம், ஒரே ஓய்வூதியம் என்ற பெயரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்து விட்டது.

பா.ஜ.க. அரசோ, ஒரே தரம், ஒரே ஓய்வூதியம் திட்டத்தினை நாட்டில் அமல்படுத்தியதுடன், அவர்களுக்கு அரியர்ஸ் தொகையையும் வழங்கியது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


Next Story