Normal
ஜவகர்லால் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி,
சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் ஜவகர்லால் நேரு. 1947-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற ஜவர்லால் நேரு தான் இறக்கும் வரை 1964-ம் பிரதமராக பதவி வகித்தார். நேரு 1964 மே 27-ம் தேதி மரணமடைந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஜவர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story