காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 19-ம் தேதி வெளியிடப்படும் - ஜெய்ராம் ரமேஷ்


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 19-ம் தேதி  வெளியிடப்படும் - ஜெய்ராம் ரமேஷ்
x
தினத்தந்தி 17 March 2024 2:38 PM IST (Updated: 17 March 2024 5:11 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன

புதுடெல்லி,

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.

இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது ,

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் (மார்ச் 19) நடைபெறுவதாகவும், இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story