166 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரசில் 21 புது முகங்களுக்கு வாய்ப்பு


166 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரசில் 21 புது முகங்களுக்கு வாய்ப்பு
x

166 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரசில் 21 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு முன்பாகவே 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 2 தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் சமமாக சீட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பார்த்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில், 21 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. தர்ஷன் துருவநாராயண் தவிர மற்ற 20 புதுமுகங்களும் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்ததாலும், சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 166 தொகுதிகளில் வெறும் 6 பெண்கள் மட்டுமே போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வெளியான 124 தொகுதிகளுக்கான பட்டியலில் தான் அந்த 6 பெண்களுக்கும் சீட் கிடைத்திருந்தது. 2-வது கட்ட பட்டியலில் 42 பேரில் ஒரு பெண் வேட்பாளருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story