சோனியா காந்தியின் தாயார் காலமானார்


சோனியா காந்தியின் தாயார் காலமானார்
x
தினத்தந்தி 31 Aug 2022 6:13 PM IST (Updated: 31 Aug 2022 6:14 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரை பார்ப்பதற்காக சோனியா காந்தி கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர்.


Next Story