டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆலோசனை


டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆலோசனை
x

கோப்புப்படம்

டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 2 அவைகளிலும் பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு உறுப்பினர்களின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் கூடி நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தயாநிதிமாறன், அ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, கிரிராஜன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தொடர்ந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றக்கூட்டத்தில் எப்படி செயல்படுவது? எந்தெந்த விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது என்பது குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

டெல்லி கட்சி அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் இப்படி கலந்து பேசுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story