கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு: எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவு


கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு: எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவு
x

கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோர்ட்டு அனுமதியளித்தும் திகார் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், சர்க்கரை நோயாளில் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தினமும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்க அனுமதிக்கும்படி கெஜ்ரிவால் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி கவெரி பவிஜா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். மேலும், கெஜ்ரிவாலுக்கு உள்ள மருத்துவ பிரச்சினைகள் குறித்து பரிசோதிக்கவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்க்கு இன்சுலின் தடுப்பூசி செலுத்துவது அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும் மருத்துவக்குழுவை அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story