குஜராத் உச்சிமாநாடு: இந்தியா வந்த செக் குடியரசு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு


குஜராத் உச்சிமாநாடு: இந்தியா வந்த செக் குடியரசு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
x

குஜராத் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு குஜராத் சென்றடைந்தார்.

காந்திநகர்,

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் இன்று 'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு' என்ற மாநாடு தொடங்குகிறது. பிரதமர் மோடி அதை தொடங்கி வைக்கிறார்.

3 நாள் மாநாட்டில், 133 நாடுகளை சேர்ந்த மந்திரிகள், தொழில் அதிபர்கள், தூதரக அதிகாரிகள் என சுமார் ஒரு லட்சம்பேர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, டாடா நிறுவன தலைவர், மைக்ரோசாப்ட் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக, அவர் நேற்று முன்தினம் இரவு குஜராத் சென்றடைந்தார். மாநாடு நடக்கும் மகாத்மா மந்திர் மாநாட்டு அரங்கத்துக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். அங்கு மாநாட்டுக்கு வந்துள்ள உலக தலைவர்களையும், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் குஜராத் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலாவை குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் வரவேற்றார்.


Next Story