இந்திரா காந்தி பிறந்தநாள்: நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் - மல்லிகார்ஜுன கார்கே


இந்திரா காந்தி பிறந்தநாள்: நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் - மல்லிகார்ஜுன கார்கே
x

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.

புதுடெல்லி,

இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,

"இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி, நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.


Next Story