மெட்ரோ ரெயிலில் ரொமான்ஸ் மூடில் காதல் ஜோடி..வைரலாகும் வீடியோ...!


மெட்ரோ ரெயிலில் ரொமான்ஸ் மூடில் காதல் ஜோடி..வைரலாகும் வீடியோ...!
x
தினத்தந்தி 26 Sept 2023 2:58 PM IST (Updated: 26 Sept 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி மெட்ரோ ரெயில்களில் கடந்த காலங்களில் இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மெட்ரோ ரெயில் ஓடி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்வதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

ஆனந்த் விஹார் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது இந்த அநாகரீகம் அரங்கேறியுள்ளது. இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல், முதியவர் ஒருவர் மெட்ரோ ரெயிலில், புகை பிடிக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள், விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Next Story