தீபாவளியை முன்னிட்டு கேரளாவில் இரவு 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி - அரசு உத்தரவு


தீபாவளியை முன்னிட்டு கேரளாவில் இரவு 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி - அரசு உத்தரவு
x

கோப்புப்படம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இரவு 10 மணிக்கு முன் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதித்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், அதில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் தீபாவளி கட்டுப்பாடுகள் தொடர்பாக நகரங்களில் கொண்டாட்டங்களின்போது அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் காற்றின் தரத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) கூறியதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Next Story