ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்


ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 April 2024 8:38 PM GMT (Updated: 13 April 2024 7:06 AM GMT)

அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story