நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்


நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்
x

நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஏ.ஏ.292 என்ற எண் கொண்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு, டெல்லி விமானத்திற்கு நேற்றிரவு 9 மணியளவில் தரையிறங்கியது.

இந்நிலையில், அந்த விமானத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் தன்னுடன் பயணித்த மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தெரிய வந்து உள்ளது.

அதுமட்டுமின்றி அந்த பயணியிடம் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு உள்ளார். விமானம் தரையிறங்கியதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு விமான ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து குடிபோதை நபரை கைது செய்து அழைத்து சென்றனர். எனினும், இந்த விவகாரம் பற்றி அதிகாரப்பூர்வ புகார் எதுவும் தங்களிடம் அளிக்கப்படவில்லை என டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. கடந்த மாதம் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது.

அதில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து புதுடெல்லி புறப்பட்டு வந்த விமானத்தில் பயணி ஒருவர் அமெரிக்க பயணி மீது நடுவானில் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அந்த நபரை வருங்காலத்தில் தனது விமானங்களில் பறப்பதில் இருந்து விமான நிறுவனம் தடை விதித்தது.


Next Story