சவுமியா ரெட்டி தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
வாக்கு எண்ணும் பணியில் முறைகேடு நடந்ததாக சவுமியா ரெட்டி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது பெங்களூரு விஜயநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சி.கே.ராமமூர்த்தி களம் கண்டார். இந்த நிலையில் அந்த மாதம் 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு இழுபறி நிலை நிலவிய சமயத்தில் முடிவில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் சி.கே.ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது வாக்கு எண்ணும் பணியில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி சவுமியா ரெட்டி தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நீதிபதி ராசய்யா இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.