பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் பயங்கர தீ விபத்து


பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் பயங்கர தீ விபத்து
x

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பட்லபூர் பகுதியில் ரெயில்வே பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் நேற்று இரவு பல ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரெயிலில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரெயிலின் ஒரு பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதேவேளை, இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story