எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டை... ராணுவ கர்னல் உள்பட 3 பேர் பலி


எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டை... ராணுவ கர்னல் உள்பட 3 பேர் பலி
x

Image Courtesy : ANI 

தினத்தந்தி 13 Sept 2023 11:02 PM IST (Updated: 14 Sept 2023 10:27 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இதில் ராஜஸ்தான் ரைபில்ஸ் பிரிவு கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷீஷ், போலீஸ் டி.எஸ்.பி. ஹுமாயுன் பட் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர்.

தொடர்ந்து கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதனிடையே காஷ்மீரில் உள்ள நர்லா பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story