அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஈ.பி.எஸ். மனு


அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஈ.பி.எஸ். மனு
x

அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அந்த திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை வரும் ஏப்ரல் 10-ந்தேதி(திங்கள்கிழமை) டெல்லி ஐகோர்ட்டு விசாரிக்க உள்ளது. அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டு வந்த போதும் தேர்தல் ஆணைய ஆவணங்களில் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர்கள் என்றே உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.




Next Story