தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்


தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்
x

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து நேற்றும் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா சிலை முன்பு பாரதிய கிசான் என்ற விவசாய சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. கர்நாடக விவசாயிகள், மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் தமிழகத்திற்கு காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்துவிட்டு அநீதி இழைத்துவிட்டது. உடனே தமிழகத்திற்கு திறக்கப்பட்ட நீரை நிறுத்த வேண்டும். இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மைசூரு

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்து மைசூரு டவுனில் உள்ள நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். முன்னதாக அவர்கள் மைசூரு கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து காலி குடங்களுடன் ஊர்வலமாக நீர்ப்பாசனத் துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற விவசாயிகள், தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் கர்நாடகத்திற்கே போதிய அளவு நீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் விவசாய சங்க தலைவர் குர்பூர் சாந்தகுமார், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் முக்கிய மந்திரி சந்துரு உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தண்ணீரில் இறங்கி...

மண்டியாவை சேர்ந்த விவசாயிகள் 3-வது நாளான நேற்று ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசு கர்நாடக விவசாயிகளை மாற்றாந்தாய் மனபான்மையுடன் பார்க்கிறது. சுப்ரீம் கோட்டில் தமிழக அரசு வழக்கு தொடருவதற்கு முன்பே நீரை ஏன் திறந்துவிடவேண்டும். இது விவசாயிகளின் வாழ்க்கை அரசியல் இல்லை. நீர்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கோட்டிற்கு செல்வதாக கூறுகிறார். மாவட்ட பொறுப்பு மந்திரி விவசாயிகளுக்க ஆதரவாக இருப்பதாக கூறுகின்றார். அதேபோல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குரல் கொடுக்கின்றனர். ஆனால் தமிழகத்திற்கு வழக்கும் நீரை அவர்களால் தடுக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளை நம்பி விவசாயிகள் இல்லை. எங்களுக்கு பயிர் சாகுபடி செய்ய நீர் வேண்டும். அதற்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் காவிரி நீரில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பாக பிடித்து கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அற்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கே.எஸ்.ஆர்., கபினி அணைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு போலீசார் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story