திருப்பதி கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதி


திருப்பதி கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதி
x

கோப்புப்படம் 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதம் 29-ம் தேதி ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து கோவில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story