பெங்களூரு இளம்பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை


பெங்களூரு இளம்பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:45 PM GMT)

பெங்களூரு இளம்பெண்ணிடம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உப்பள்ளி:

பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்த அரவிந்தா என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அரவிந்தா அந்த பெண்ணிடம் உப்பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணை உப்பள்ளிக்கு வருமாறு அரவிந்தா அழைத்து உள்ளார். இதனை நம்பிய அந்த பெண் நேற்றுமுன்தினம் உப்பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து அரவிந்தா, உப்பள்ளி வந்த அந்த பெண்ணை ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆள்நாடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.


அங்கு வைத்து அவர் கத்தியை காட்டி அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கநகைகள், ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் உடனே இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தாவை வலைவீசி தேடிவருகின்றனா்.


Next Story