டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார்
டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த அர்விந்தர் சிங் லவ்லி, கடந்த மாதம் 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததில் தனக்கு உடன்பாடு இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். டெல்லியில் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் அர்விந்த சிங் லவ்லி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.
இதற்கு முன்பு ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார். பின்னர் 2017-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், 9 மாதங்களுக்குப் பின் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.