ஜி-20 மாநாடு நிறைவு; இங்கிலாந்து புறப்பட்டார் ரிஷி சுனக்


ஜி-20 மாநாடு நிறைவு; இங்கிலாந்து புறப்பட்டார் ரிஷி சுனக்
x

ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு சுனக் தனது மனைவியுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் இந்தியாவிற்கு வருகை தந்தார். முன்னதாக டெல்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்தார்.

தொடர்ந்து ஜி-20 மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று மாநாடு நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் ரிஷி சுனக் தனது மனைவியுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டின் போது பருவநிலை மாற்றம் தொடர்பான 'பசுமை பருவநிலை நிதி' அமைப்பிற்கு இங்கிலாந்து அரசு சார்பில் 20 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story