ஆற்றில் திடீர் வெள்ளம்: காரின் மேலே அமர்ந்து உயிர் தப்பிய தம்பதி - வைரல் வீடியோ


ஆற்றில் திடீர் வெள்ளம்: காரின் மேலே அமர்ந்து உயிர் தப்பிய தம்பதி - வைரல் வீடியோ
x

ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் காரின் மேலே அமர்ந்து உயிர் தப்பிய தம்பதி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

காந்தி நகர்,

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், நைனா மிஸ்ட்ரி தம்பதி நேற்று காரில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

கடியரா , வித்யாவீரர் கிராமங்களுக்கு இடையே கரோல் ஆற்றுப்பகுதியில் சென்றபோது திடீர் வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டது. தம்பதியர் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

வெள்ளத்தில் கார் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. பின்னர், பாறை மீது மோதிய கார் வெள்ளத்தின் மையப்பகுதியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதில் இருந்து தப்பிக்க காரின் மேலே ஏறியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பக்கத்து கிராமத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தம்பதியை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




Next Story