வெப்ப அலை பரவல்; ஒடிசாவில் அனைத்து பள்ளிளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை


வெப்ப அலை பரவல்; ஒடிசாவில் அனைத்து பள்ளிளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை
x

வெப்ப அலை பரவலை முன்னிட்டு ஒடிசாவில் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி கூடங்களுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர்,

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருவமழை நன்றாக பெய்தபோதும், கோடை காலத்தில் வெப்பம் அதன் தீவிர தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் பரவி வருகிறது.

இந்த சூழலில், நாட்டின் 90 சதவீத பகுதிகளில் வெப்பம் பரவும் என்றும் டெல்லி பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

வெப்ப அலை பரவலை முன்னிட்டு, அதனை எதிர்கொள்ள, பணி நேரங்களை மாற்றியமைத்து கொள்ளும்படி மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டு கொண்டது.

இந்த நிலையில், வெப்ப அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஒடிசா அரசு முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்து உள்ளது. இதன்படி, ஒடிசாவில் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்களுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story