டெல்லியில் கடும் பனிமூட்டம்; ரெயில், விமான சேவைகள் பாதிப்பு


டெல்லியில் கடும் பனிமூட்டம்; ரெயில், விமான சேவைகள் பாதிப்பு
x

போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பனிமூட்டத்தால் ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்குவதற்கு போதிய வெளிச்சம் இல்லாத சூழல் நிலவியது. இதனால் சுமார் 50 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின.

மேலும் 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதே போல், ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி வரவேண்டிய மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் ரெயில்கள் தாமதமாகியுள்ளன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


1 More update

Next Story