இமாச்சல பிரதேசத்தில் வேகமாக பரவும் காட்டுத்தீ
காட்டுத்தீயில் சிக்கி வன விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எங்கு திரும்பினாலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள பாட்லிகுஹால் வனப்பகுதியில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக மற்ற இடங்களுக்கும் தீ பரவி வருகிறது. இதனால் ஏராளமான மரங்கள் தீக்கிரையாகின. காட்டுத்தீயில் சிக்கி வன விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எங்கு திரும்பினாலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வன வளம் அழிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story