இமாசல பிரதேசம்; 2,500 இரவுநேர சேவையை நிறுத்தி விடுவோம்: அரசு பஸ் ஓட்டுநர்கள் எச்சரிக்கை


இமாசல பிரதேசம்; 2,500 இரவுநேர சேவையை நிறுத்தி விடுவோம்: அரசு பஸ் ஓட்டுநர்கள் எச்சரிக்கை
x

கோரிக்கையை ஏற்காவிட்டால் 2,500 இரவுநேர சேவையை நிறுத்தி விடுவோம் என இமாசல பிரதேச அரசு பஸ் ஓட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சிம்லா,

இமாசல பிரதேச அரசு போக்குவரத்து கழகம் 3,300 பஸ்களை இயக்கியும், 8 ஆயிரம் பணியாளர்களை கொண்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரவு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், 41 மாதங்களாக தங்களுக்கு தர வேண்டிய கூடுதல்நேர இரவு பணிக்கான அரியர்ஸ் தொகையை தராமல் இருக்கின்றனர் என கூறியுள்ளனர்.

சமீபத்தில் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் எந்தவித பலனும் இல்லை. அதனால், நாங்கள் வரும் 15-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்.

அரியர்ஸ் பணத்திற்கான முன்தொகையை பெறும் வரை இரவுநேர பணிக்கு செல்லமாட்டோம். கோரிக்கையை ஏற்காவிட்டால் 2,500 பஸ் ஓட்டுநர்கள் பணியை நிறுத்தி விடுவோம்.

அதே அளவிலான நடத்துநர்களும் பணியாற்ற மாட்டார்கள். அதனால், 5 ஆயிரம் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

எனினும், இமாசல பிரதேச அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. சந்தீப் கூறும்போது, பல கட்ட அடிப்படையில் அவர்களது அனைத்து கோரிக்கைகளும் தீர்க்கப்படும். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

10-ல் ஒரு யூனியனே இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். அவர்களின் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளும்போது, இரவு சேவையில் பெரிய பாதிப்பு ஏற்படாது. எந்த பயணியும் பாதிக்கப்படவில்லை என நாங்கள் உறுதி செய்ய முடியும் என கூறியுள்ளார்.


Next Story