'அனைவருக்கும் வீடு' திட்டம்: தேசிய அளவில் 3-வது இடம் பிடித்த தமிழகத்திற்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்
‘அனைவருக்கும் வீட்டு வசதி’ திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
காந்திநகர்,
பிரதமரின் 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். இந்த விருதை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.
'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3-வது இடத்தையும், சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தையும், சிறந்த பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.
பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தை (PMAY) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்ததை தொடர்ந்து குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுவசதி மாநாட்டில் அவ்விருதை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் இருந்து பெற்ற போது.. pic.twitter.com/0wGWeJ4gj7
— Tha Mo Anbarasan (@thamoanbarasan) October 20, 2022 ">Also Read: