நாய்க்கு பிஸ்கட் கொடுத்த விவகாரம்: ராகுல்காந்தி விளக்கம்


நாய்க்கு பிஸ்கட் கொடுத்த விவகாரம்: ராகுல்காந்தி விளக்கம்
x

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

ராஞ்சி,

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை கடந்த ஜன., 14ம் தேதி ராகுல்காந்தி துவங்கினார். தற்போது ராகுல்காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது.

ராஞ்சியில் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், காரின் மேற்புறத்தில் ராகுல்கந்தி அமர்ந்திருக்கிறார். அவர் அருகே நாய் குட்டி ஒன்று இருந்தது.

ராகுல்காந்தி அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து அந்த பிஸ்கட்டை அருகில் இருந்த நபரிடம் கொடுக்கிறார். பிறகு அந்த நாய் பிஸ்கட்டை சாப்பிட்டது. இந்த வீடியோவை சமூகவலைதளத்தில், பா.ஜ.க. - ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா, மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் பதிவிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் கட்சியினரை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்த கட்சி மாயமாகிவிடும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட பதிவில்,

ராகுல்காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரசில் நான் இருந்தபோது அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை.நான் ஒரு இந்தியன். நான் சாப்பிட மறுத்து காங்கிரசில் இருந்து விலகினேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பாத யாத்திரையில் நாய்க்கு பிஸ்கட்டை ஒருவருக்கு கொடுத்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் அதில்,

நாய்க்கு பிஸ்கட்டை கொடுக்க முயன்றபோது அது கூட்டத்தை கண்டு நடுங்கியதால் உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். பிறகு அதனை நாய் சாப்பிட்டது. இந்த சின்ன விஷயத்தை ஏன் பெரிதாக்கினார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

மேலும் இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி இருக்கிறார் எனவும் நிதிஷ்குமார் மட்டுமே இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார் எனவும் கூறினார்.


Next Story