தட்சிண கன்னடா கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம்


தட்சிண கன்னடா கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 8:35 AM GMT)

கர்நாடகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பெங்களூருவில் நிதி கொள்கை நிறுவன கூடுதல் இயக்குனர் பல்லவி ஆகுரதி, சகாலா திட்ட கூடுதல் இயக்குனராகவும், நீர்நிலைகள் மேம்பாட்டுத்துறை கமிஷனர் வெங்கடேஷ் கால்நடைத்துறை கமிஷனராகவும், பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர்(திட்டங்கள்) ரவீந்திரா சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டராகவும், பெங்களூரு சீர்மிகு நகர திட்ட நிர்வாக இயக்குனர் சீனிவாஸ் துமகூரு மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லை முகிலன்

சகாலா திட்ட கூடுதல் இயக்குனர் ஜானகி பாகல்கோட்டை மாவட்ட கலெக்டராகவும், ஸ்மார்ட் ஆளுமை மைய செயல் இயக்குனர் முல்லை முகிலன் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராகவும், விவசாய சந்தைகள் துறை இயக்குனர் யோகேஷ், போக்குவரத்துத்துறை கமிஷனராகவும், தட்சிண கன்னடா மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி குமார், மண்டியா மாவட்ட கலெக்டராகவும், சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி பிரபு பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக தகவல் ஆணைய செயலாளர் நவீன்குமார் ராஜூ, கா்நாடக குடியிருப்பு நிறுவனங்கள் சமூக செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணி இடமாறுதல், பெற்ற அதிகாரிகளில் முல்லை முகிலன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story