"டெல்லி ஜும்மா மசூதியின் படிக்கட்டுகளில் கடவுள் சிலைகள் உள்ளது" - பிரதமர் மோடிக்கு இந்து மகாசபா கடிதம்


டெல்லி ஜும்மா மசூதியின் படிக்கட்டுகளில் கடவுள் சிலைகள் உள்ளது - பிரதமர் மோடிக்கு இந்து மகாசபா கடிதம்
x

ஜும்மா மசூதி அமைந்துள்ள பகுதியை தோண்டி, அங்குள்ள கடவுள் சிலைகளை மீட்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி, இந்தியாவின் புகழ்பெற்ற மசூதிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த மசூதி முகலாய மன்னர் ஷாஜகானால், 1,656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முகலாயர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இந்த மசூதி, தற்போது இஸ்லாமியர்களின் தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அகில பாரதிய இந்துமகா சபா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முகலாய மன்னர் அவுரங்கசீப், ஜோத்பூர் உள்ளிட்ட இதர பகுதிகளில் இந்து ஆலயங்களை இடித்து தள்ளிவிட்டு டெல்லி திரும்பியபோது, இந்து கடவுள்களின் சிலைகளை ஜும்மா மசூதியின் படிக்கட்டுகளின் கீழ் புதைக்க உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜும்மா மசூதி அமைந்துள்ள பகுதியை தோண்டி, அங்குள்ள கடவுள் சிலைகளை மீட்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாஜ்மகால், ஞானவாபி மசூதி குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், தற்போது ஜும்மா மசூதி குறித்த சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story