சிவமொக்காவில் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்
சிவமொக்காவில் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா-
சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் சித்தண்ணா. இவர் கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை வாரியத்தின் துணை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் சித்தண்ணாவை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் தன்னை கிேஷார் என அறிமுகப்படுத்தி, நான் பெங்களூரு லோக் அயுக்தாவில் அதிகாரியாக உள்ளேன் எனவும், உங்கள் மீது புகார் வந்துள்ளது. எனவே உங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்த லோக் அயுக்தா போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனையை நடத்தாமல் இருக்க நீங்கள் ரூ.1 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சித்தண்ணா, ஜெயநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story