இந்தியா ஒரு மறுக்கமுடியாத உலக சக்தியாக திகழ்கிறது : தென்கொரியா பாராட்டு


இந்தியா ஒரு மறுக்கமுடியாத உலக சக்தியாக திகழ்கிறது : தென்கொரியா பாராட்டு
x

ஜி20 தலைமை பொறுப்பு, இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதாக அமையும் என தென்கொரியா பாராட்டு தெரிவித்துள்ளது.

சண்டிகார்,

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஓராண்டு காலத்துக்கு இந்தியா ஏற்றுள்ளது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 மாநாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் ஜி20 சர்வதேச நிதி கட்டமைப்பு செயற்குழுவின் 2 நாள் கூட்டம், பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில் நேற்று தொடங்கியது.

இதில், உலக நிதி கட்டமைப்பு நிலைத்தன்மையையும், ஒன்றிணைப்பையும் மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் 21-ம் நூற்றாண்டில் உலக சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

உலக சக்தி

இந்த சர்வதேச நிதி கட்டமைப்பு செயற்குழுவில் பிரான்ஸ், தென்கொரியா நாடுகள் இணை தலைமை பொறுப்பை வகிக்கின்றன.

இந்நிலையில் சண்டிகார் கூட்டத்தின் தொடக்கநிகழ்வில் தென்கொரிய பிரதிநிதி பயுங்சிங் ஜங் பேசுகையில், 'இந்தியா ஒரு மறுக்கமுடியாத உலக சக்தியாக திகழ்கிறது. அது, இந்தியாவின் பொருளாதார உயரத்தாலும், மக்கள்தொகையாலும் மட்டுமின்றி, இந்நாட்டின் வரலாறு, முக்கிய நபர்கள், திரைப்படங்கள், சமையல் கலை ஆகியவற்றாலும் உருவாகி இருக்கிறது.

கருத்துகள், ஆலோசனைகளுக்கு

ஜி20 தலைமை பொறுப்பு, இந்தியாவின் திறனையும், வசீகரத்தையும் வெளிப்படுத்துவதாக அமையும். இந்த அமைப்பின் உறுப்பின நாடுகளின் கருத்துகள், ஆலோசனைகளுக்கு இந்தியா செவிமடுக்கும், அதன்மூலம் சர்வதேச சமூகத்தின் நலனுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்' என்று கூறினார்.


Next Story