ரஷிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியர்கள்; உக்ரைன் போரில் இருந்து விலகியிருக்க இந்தியா அறிவுறுத்தல்


ரஷிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியர்கள்; உக்ரைன் போரில் இருந்து விலகியிருக்க இந்தியா அறிவுறுத்தல்
x

ரஷிய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனிடையே இந்த போரில் உக்ரைன் எல்லைகளில் போரிடுவதற்கு ரஷிய ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியர்கள் சிலர் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியர்கள் சிலர் ரஷிய ராணுவத்தில் துணை பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவர்களை விரைவில் அங்கிருந்து வெளியேற்ற ரஷிய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷியாவில் உள்ள இந்தியர்கள் உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story