கொரோனாவுக்கு மூக்குவழி தடுப்பு மருந்து: இந்தியாவில் அனுமதி


கொரோனாவுக்கு மூக்குவழி தடுப்பு மருந்து: இந்தியாவில் அனுமதி
x

கோப்புப்படம்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்து சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் பக்க விளைவுகளோ, விரும்பத்தகாத பிற விளைவுகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இதைப் பரிசீலித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், இந்த மூக்கு வழிதடுப்பு மருந்துக்கு தனது அனுமதியை வழங்கியது. இதை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பு மருந்து, கொரோனாவுக்கு எதிரான கூட்டுப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படும்.


Next Story