"காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட துணை நிலை கவர்னர் ஆக தகுதி இல்லையா?" - பா.ஜ.க.விற்கு மெகபூபா முப்தி கேள்வி


காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட துணை நிலை கவர்னர் ஆக தகுதி இல்லையா? - பா.ஜ.க.விற்கு மெகபூபா முப்தி கேள்வி
x

பதிலாக உத்தர பிரதேசத்தில் இருந்து துணை நிலை கவர்னரை நியமித்தது ஏன்? என்று மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பா.ஜ.க. காஷ்மீரில் இருந்து துணை நிலை கவர்னரை உருவாக்கி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் அதற்கு பதிலாக உத்தர பிரதேசத்தில் இருந்து துணை நிலை கவர்னரை நியமித்தது ஏன்? என்றும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களைத் தான் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு கொண்டு வருவோம் எனக் கூறிய பா.ஜ.க.வின் வாக்குறுதி என்னவாயிற்று? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story