கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு


கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு
x

கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ஜனார்தன் என்ற பேங்க் ஜனார்தன். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மணிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜனார்தனுக்கு தற்போது 74 வயது ஆகிறது. அவர் கன்னட திரைஉலகில் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள அவர் இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story