யாதகிரியில் பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்


யாதகிரியில் பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்
x

யாதகிரியில் பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பெங்களூரு:

யாதகிரி மாவட்டம் சுராபுரா தொகுதியில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி உள்ளது. அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ராஜு கவுடா இருந்து வருகிறார். சுராபுரா அருகே உடைக்கல் தான் ராஜுகவுடாவின் சொந்த ஊர் ஆகும். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணப்பா நாயக், வெங்கடப்பா நாயக் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் 20-க்கும் மேற்பட்ட கார்களில் நாராயணபுராவுக்கு பிரசாரத்துக்கு சென்றனர். உடைக்கல் கிராமத்தின் வழியாக தான் காங்கிரஸ் கட்சியினர் சென்ற கார்கள் சென்றது.

உடைக்கல் கிராமத்தில் தற்போது பசவண்ணர் கோவில் திருவிழா நடப்பதால், வேறு வழியில் செல்லும்படி ராஜுகவுடாவின் ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, காங்கிரசார் தாங்கள் அமர்ந்திருந்த கார்களில் அதிக சத்தத்துடன் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருந்தனர். இதனால் காங்கிரஸ், பா.ஜனதாவினர் தொண்டர்கள் இடையே மோதல் உருவானது. இருதரப்பினர்கள் மாறி, மாறி கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதில், 2 கட்சிகளை சேர்ந்த தொண்டர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சுராபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சுராபுராவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story