தமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா எப்போதுமே ஒப்புக்கொண்டதில்லை - அமைச்சர் துரைமுருகன்


தமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா எப்போதுமே ஒப்புக்கொண்டதில்லை - அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 18 Sept 2023 5:42 PM IST (Updated: 18 Sept 2023 10:02 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா எப்போதுமே ஒப்புக்கொண்டதில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் கர்நாடகா இன்று, நேற்றல்ல எப்போதுமே முரண்டுதான் பிடிக்கும். தமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை. மத்திய அரசு, கர்நாடக அரசை நாங்கள் நம்பவில்லை; சுப்ரீம் கோர்ட்டை மட்டும்தான் நம்புகிறோம். காவிரி விவகாரத்தில் இதுவரை அனைத்தையுமே நீதிமன்றத்தின் மூலமே பெற்றிருக்கிறோம்.

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நாளை காலை 9.30 மணிக்கு சந்தித்து மனு அளிக்க உள்ளோம். காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். தமிழ்நாட்டுக்கு 107 டி.எம்.சி நீர் வர வேண்டியது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story