'மனைவியின் செலவுகளை கணவன் தான் ஏற்க வேண்டும்'; ஜீவனாம்சம் வழங்க மறுத்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கருத்து


மனைவியின் செலவுகளை கணவன் தான் ஏற்க வேண்டும்; ஜீவனாம்சம் வழங்க மறுத்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

‘மனைவியின் செலவுகளை கணவன் தான் ஏற்க வேண்டும்’ என்று ஜீவனாம்சம் வழங்க மறுத்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி மற்றும் 21 வயது மகனுடன் வசித்து வந்தார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து தொழில் தொடங்கினார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்தனர். இதுதொடர்பான வழக்கில், ராஜா மாதந்தோறும் தனது மனைவிக்கு ரூ.75 ஆயிரத்தை ஜீவனாம்சமாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, ராஜா கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி பிரசன்னா அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் நீதிபதி கூறுகையில், 'மனைவியின் பணம், முதலீட்டில் தொழில் தொடங்கிவிட்டு, தற்போது பிரிந்த பிறகு வருமானத்தை மட்டும் கொடுப்பதில் பாகுபாடு எதற்கு?' என்று கேள்வி எழுப்பினார். மேலும் 'சொகுசு கார்களை பராமரிக்க விரும்பும் கணவர்கள், பிரிந்து சென்ற மனைவி, பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.


இதையடுத்து மனைவியின் ஜீவனாம்சம், மகனின் கல்வி செலவுகளை ராஜா தான் ஏற்கவேண்டும் என்றும், ஜீவனாம்சத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.


Next Story