கேரளா: வயநாட்டில் வனத்துறையினர் செயல்பாடுகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம்


கேரளா: வயநாட்டில் வனத்துறையினர் செயல்பாடுகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
x

வனத்துறை வாகனத்திற்கு மலர் வளையம் வைத்து வயநாடு மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் காட்டு யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வயநாடு வாழ் மக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறை வாகனத்திற்கு மலர் வளையம் வைத்தும், வாகனத்தின் டயர்களில் காற்றை திறந்துவிட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



Next Story