மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை லாவகமாக காப்பாற்றிய அண்ணன்


மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை லாவகமாக காப்பாற்றிய அண்ணன்
x

கேரளாவில் மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை அவரது அண்ணண் லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளார்.

மலப்புரம்,

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர்கள் 2 பேர் நேற்று முன்தினம் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பி வீட்டின் மாடியில் ஏறி சுத்தம் செய்தார். அண்ணன் கீழ்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென மாடியில் இருந்து தம்பி தவறி விழுந்தார். உடனே அவரது அண்ணன் அவரை லாவகமாக பிடித்து காப்பாற்றினார். இதில் தம்பியின் எடை தாங்காமல் அண்ணனும் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.

இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி இருந்தது. நொடிப்பொழுதில் தம்பியை காப்பாற்றிய அண்ணனின் இந்த பாச காட்சிகள் வைரலாகி வருகிறது.


Next Story