திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்


திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்
x

மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், பாத யாத்திரையாக வந்தும் சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த மலை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் அதில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து விலங்குகள் அடிக்கடி வழி தவறி மலைப்பாதைகளுக்கும், கோவில் அருகிலும் வந்து விடுகின்றன.

இந்நிலையில், நேற்று திருப்பதி அலிப்பிரி மலைப்பாதை பகுதியில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பது அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இதுப்பற்றிய புகைப்பட காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டு மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் கவனத்துடன் செல்ல எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story