சிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை

சிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை
x

முறைகேடு புகார் எதிரொலியாக சிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல்:

முறைகேடு புகார் எதிரொலியாக சிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லோக் அயுக்தா சோதனை

சிக்பள்ளாப்பூர் நகரில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவது, காய்கறி, பழங்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக லோக் அயுக்தாவுக்கும் புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் நேற்று லோக் அயுக்தா சூப்பிரண்டு பவன் நெஜ்ஜூர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார், ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஏ.பி.எம்.சி. மார்க்கெட் அலுவலகத்திலும், வியாபாரிகளின் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

பல லட்சம் ரூபாய் சிக்கியது

மேலும் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் அலுவலகத்தில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதனையும் லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர். மேலும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் லோக் அயுக்தா சோதனை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story