7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எப்போது? - முழு விவரம்


7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எப்போது? - முழு விவரம்
x
தினத்தந்தி 16 March 2024 5:30 PM IST (Updated: 16 March 2024 8:52 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி,

543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன் விவரம்:-

* முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 19

* 2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26

* 3ம் கட்ட தேர்தல் - மே 7

* 4ம் கட்ட தேர்தல் - மே 13

* 5ம் கட்ட தேர்தல் - மே 20

* 6ம் கட்ட தேர்தல் - மே 25

* 7ம் கட்ட தேர்தல் - ஜூன் 1

* வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

அதன் முழு விவரம் பின்வருமாறு:-

ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

தமிழ்நாடு, அருணாச்சலபிரதேசம், , அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரா, சண்டிகார், டெல்லி, கோவா, குஜராத், இமாச்சலபிரதேசம், அரியானா, கேரளா, லட்சத்தீவுகள், லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட்

2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர்

3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

சத்தீஷ்கார், அசாம்

4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட்

5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

மராட்டியம், ஜம்மு-காஷ்மீர்

7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம்

தேர்தல் தேதி விவரம்:-

1ம் கட்ட தேர்தல்;-

102 தொகுதிகள்

* தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

* வேட்புமனு தாக்கல் வரும் 20ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி கடைசிநாள்

* வரும் 28ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள்

* ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

2ம் கட்ட தேர்தல்:-

89 தொகுதிகள்

* வேட்புமனு தாக்கல் வரும் 28ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 4ம் தேதி கடைசிநாள்

* ஏப்ரல் 6ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்ரல் 8ம் தேதி கடைசி நாள்

* ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

3ம் கட்ட தேர்தல்:-

94 தொகுதிகள்

* வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 19ம் தேதி கடைசிநாள்

* ஏப்ரல் 20ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாள்

* மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

4ம் கட்ட தேர்தல்

96 தொகுதிகள்

* வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 18ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 25ம் தேதி கடைசிநாள்

* ஏப்ரல் 26ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாள்

* மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

5ம் கட்ட தேர்தல்

49 தொகுதிகள்

* வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 26ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய மே 3ம் தேதி கடைசிநாள்

* மே 4ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற மே 6ம் தேதி கடைசி நாள்

* மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

6ம் கட்ட தேர்தல்

57 தொகுதிகள்

* வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 29ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய மே 6ம் தேதி கடைசிநாள்

* மே 7ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற மே 9ம் தேதி கடைசி நாள்

* மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்த லில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

7ம் கட்ட தேர்தல்

57 தொகுதிகள்

* வேட்புமனு தாக்கல் மே 7ம் தேதி தொடக்கம்

* வேட்புமனுவை தாக்கல் செய்ய மே 14ம் தேதி கடைசிநாள்

* மே 15ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும்

* வேட்புமனுவை திரும்பப்பெற மே 17ம் தேதி கடைசி நாள்

* ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

* தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

ஏப்ரல் 19 ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


Next Story